/indian-express-tamil/media/media_files/AVY5V9SEuYtYVqM0SrGx.jpg)
தமிழகத்தில் இரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வுக்கு 5258 விர்ச்சுவல் காலியிடங்கள் இருப்பதாக கவுன்சலிங் கமிட்டி முதன்முறையாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று நிறைவடைந்து 7513 பேருக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது இரண்டாம் சுற்றுக்கான சேர்க்கை செயல்முறை தொடங்கியுள்ளது. இரண்டாம் சுற்றுக்கு 2000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங் கமிட்டி, முதன்முறையாக விர்ச்சுவல் காலியிடங்கள் என்பதை வெளியிட்டுள்ளது. அதன்படி இதில் 5258 மருத்துவ இடங்கள் உள்ளன.
விர்ச்சுவல் காலியிடங்கள் என்பது, முந்தைய சுற்றில் இடம் கிடைத்து, கல்லூரிகளை மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கையாகும்.
விர்ச்சுவல் காலியிடங்களைப் பொறுத்தவரை அரசு மருத்துவ கல்லூரிகளில் 2401 எம்.பி.பி.எஸ் இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 111 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 1330 எம்.பி.பி.எஸ் இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 163 எம்.பி.பி.எஸ் இடங்களும், தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் 437 எம்.பி.பி.எஸ் இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் 83 இடங்களும், என்.ஆர்.ஐ கோட்டாவில் 96 எம்.பி.பி.எஸ் இடங்களும் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 483 பி.டி.எஸ் இடங்களும், தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் 153 பி.டி.எஸ் இடங்களும், என்.ஆர்.ஐ கோட்டாவில் 1 பி.டி.எஸ் இடமும் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.