இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேவையான 14 ஆவணங்களின் பட்டியலை மாநிலத் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது
மூன்றாவது முறையாக நீட் 2024 முடிவுகளை அறிவிக்கும் தேசிய தேர்வு முகமைக்காக (NTA) மாணவர்கள் இன்னும் காத்திருக்கும் நிலையில், அரசு கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு, நிர்வாக அல்லது என்ஆர்ஐ ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்குமாறு மாநிலத் தேர்வுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
படிவங்களை பதிவிறக்கம் செய்து ஆவணங்களுடன் திரும்ப அனுப்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் கால அவகாசம் நீண்டதாக இருக்காது. செயல்முறை துரிதப்படுத்தப்படலாம். மாணவர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், என்று தேர்வுக் குழுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன ஆவணங்கள் தேவை?
நீட் நுழைவு மற்றும் மதிப்பீட்டு அட்டைகள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், தமிழ்நாட்டில் படித்த விண்ணப்பதாரர்களுக்கு 6 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கான சான்று, கம்யூனிட்டி சான்றிதழ் மற்றும் தேவைப்பட்டால் நேட்டிவிட்டி சான்றிதழ் ஆகியவற்றை தயாராக வைத்திருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
7.5% ஒதுக்கீட்டின் கீழ் இடஒதுக்கீடு கோரும் மாணவர்களுக்கு, சி.இ.ஓ.வின் போனோஃபைட் சான்றிதழ் தேவைப்படும் (2023 மற்றும் 2024 இல் முடித்த மாணவர்களுக்குத் தேவையில்லை). கட்டண விலக்கு கோரும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ (TN/CBSE/ICSE) தவிர மற்ற வாரியங்களின் விண்ணப்பதாரர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் அவசியம்.
இது தவிர, வருவாய் அதிகாரியிடமிருந்து பெற்றோரில் ஒருவரின் கம்யூனிட்டி சான்றிதழ் அவர்களுக்குத் தேவைப்படும். மாணவர்கள் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சீட் கோரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவம் மற்றும் மொழி சிறுபான்மை சான்றிதழ்கள் (தெலுங்கு மற்றும் மலையாளம்) அவசியம்.
அந்தந்த நாட்டின் இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்ட நிதி ஆதரவாளரின் (financial supporter) NRI ஸ்டேட்டஸ், NRI நிதி ஆதரவாளருக்கும் விண்ணப்பதாரருக்கும் இடையிலான உறவின் சான்றிதழ் மற்றும் NRI நிதி ஆதரவாளரின் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் ஆகியவை தேவை, என்று மாநிலத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.