யோகா – இயற்கை மருத்துவ படிப்புக்கு 4200 பேர் விண்ணப்பம்; தரவரிசை பட்டியல் எப்போது?

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 4200 பேர் விண்ணப்பம்; தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும்?

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 4200 பேர் விண்ணப்பம்; தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும்?

author-image
WebDesk
New Update
mbbs students

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ (BNYS) பட்டப் படிப்புக்கு 4200 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. முன்னதாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்தப் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண் தேவையில்லை. மேலும் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறும். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

இந்தநிலையில், விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர 4200 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் தகுதியான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Medical Seats Medical Admission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: