/indian-express-tamil/media/media_files/qPolrUXgi3tdACrYn3KU.jpg)
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எவ்வளவு உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எவ்வளவு உள்ளன என்பதை கல்வி ஆலோசகர் அனந்தமூர்த்தி தனது எவர்கிரீன் கைடன்ஸ் என்ற யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.
அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 3841 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 91 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 1823 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 268 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
பி.டி.எஸ் இடங்களைப் பொறுத்தவரை, அரசு மருத்துவ கல்லூரிகளில் 197 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1360 இடங்களும் உள்ளன.
இந்த இடங்கள் 92.5% பொது கலந்தாய்வில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் நீங்கலாக என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.