Advertisment

மருத்துவத் துறையில் 3,645 காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு; அமைச்சர் மா.சு அறிவிப்பு

மருத்துவத்துறையில் 3,645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டம்; சட்டப்பேரவையில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author-image
WebDesk
New Update
ietamil fb live ma subramaian

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024 ஆம் ஆண்டு மருத்துவத்துறையில் 21 பிரிவுகளில், 3,645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் பதவியில் உள்ள 367 இடங்கள், கண் மருத்துவ உதவியாளர் பதவியில் உள்ள 100 இடங்கள், மருந்தாளுநர் (சித்தா) பதவியில் உள்ள 49 இடங்கள் உள்ளிட்ட 21 வகை பதவிகளில் காலியாக உள்ள 3,645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வுகளிலும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் இடம்பெறும். தேர்வுகளை நெறிப்படுத்தி, வலுவான நடைமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஒளிவுமறைவற்ற வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment