தமிழக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? இந்த ஆண்டு தேர்வு எப்போது நடைபெறும்? உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்புனர், நுண்கதிர்வீச்சாளர் உள்ளிட்ட மருத்துவ பணியிடங்களை தேர்வுகள் நடத்தி வருகிறது.
இந்த தேர்வுகளில் செவிலியர் பணிக்கான தேர்வு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு தேர்வு எப்போது நடைபெறும்? வயது வரம்பு என்ன? உள்ளிட்ட தகவல்கள் நர்ஸஸ் புரபைல் யூடியூப் சேனல் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடைசியாக, எம்.ஆர்.பி நர்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நர்ஸ் தேர்வு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், 5000 முதல் 7000 காலியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வயது தகுதியைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி.எம், பி.சி பிரிவினர் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அடுத்ததாக, தமிழ்நாடு நர்சிங் கவுன்சலில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத தகுதியுள்ளவர்கள்.