தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) துணை செவிலியர் அல்லது கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.10.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE
காலியிடங்களின் எண்ணிக்கை : 2250
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multi – Purpose Health Workers (Female) training Course / Auxiliary Nurse Midwifery Training Course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 42 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 19,500 – 62,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் உங்கள் பெயர், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதிக் கொண்டு பதிவுச் செய்துக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் புகைப்படம், கையொப்பம், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை தகுந்த அளவில் சாஃப்ட்வேர் ஆவணமாக மாற்றி பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, இறுதியாக சமர்பித்து சேமித்துக் கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/VHN_Notification_2023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.