தேர்வு இல்லை; மருத்துவ துறையில் 95 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு மருத்துவ வாரிய வேலை வாய்ப்பு; 95 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மருத்துவ வாரிய வேலை வாய்ப்பு; 95 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mrb jobs

தமிழ்நாடு மருத்துவ வாரியம்

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) ஈ.சி.ஜி டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 95 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 21.08.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

இதையும் படியுங்கள்: அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

ஈ.சி.ஜி டெக்னீசியன் (ECG Technician)

காலியிடங்களின் எண்ணிக்கை : 95

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Electro Cardiogram or Treadmill Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2023/DOCS/Notification%20ECG%20Final%202023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: