தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.11.2024 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)
காலியிடங்களின் எண்ணிக்கை: 47
கல்வித் தகுதி: Degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு 18.10.2024 அன்று 18 வயது முதல் 32 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி / எஸ்.சி.ஏ/ எஸ்.டி/ எம்.பி.சி / பி.சி / பி.சி.எம் பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 36,200 - 1,14,800
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, எஸ்.சி/ எஸ்.சி.ஏ/ எஸ்.டி/ மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு ரூ. 500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“