தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், கவுன்சிலிங் செயல்முறை எப்படி? டாப் மெடிக்கல் காலேஜ் எவை? உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஜூலை 10 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதையும் படியுங்கள்: NEET UG 2023 Counselling: கவுன்சலிங் நடைமுறை எப்படி? 4 கட்டமாக நடைபெற வாய்ப்பு
இந்தநிலையில், நீட் கவுன்சிலிங் செயல்முறை என்ன? டாப் கல்லூரிகள் எவை என்பது உள்ளிட்ட தகவல்களை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில், மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 13.600, தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 4,50,000.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சென்னை கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியும் அடங்கும். இதுதவிர 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசை
- மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை
- ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை
- கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை
- மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை
- கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
- ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை
- அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர்
- செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு
- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்
- அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்
- திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி
- கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி
- விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்
- கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி
- வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர்
- இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை
- தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி
- அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு
- தேனி மருத்துவக் கல்லூரி, தேனி
- கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம்
- தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி
- அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்
- கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர்
- திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை
- அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர்
- அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
- அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்
- புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
- அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி
- அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி
- திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர்
- அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்
- அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்
- சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை
- அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம்
- அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்
- அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி
தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரவரிசை
- கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), வேலூர்
- பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், கோயம்புத்தூர்
- கே.எம்.சி.ஹெச் இன்ஸ்டிடியூப் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், கோயம்புத்தூர்
- திருச்சி எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர், திருச்சி
- வேலம்மாள் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர், சென்னை
- கற்பக வினாயகா இன்ஸ்டிடியூப் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், சென்னை
- பனிமலர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்
- ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை
- தாகூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல், சென்னை
- செயிண்ட் பீட்டர்ஸ் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கிருஷ்ணகிரி
- ஸ்ரீ மூகாம்பிகை இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், கன்னியாகுமரி
- தனலட்சுமி மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், பெரம்பலூர்
- கற்பகம் ஃபேகல்டி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், கோயம்புத்தூர்
- அருணை மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், திருவண்ணாமலை
- சுவாமி விவேகானந்தா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், நாமக்கல்
- அன்னப்பூர்ணா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், சேலம்
- மாதா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், சென்னை
- இந்திரா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், திருவள்ளூர்
- பி.எஸ்.பி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை
- நந்தா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், ஈரோடு
- ஸ்ரீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், திருச்சி
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை
- தனலட்சுமி மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல், பெரம்பலூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.