தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகம் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2023) கவுன்சிலிங் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் நீட் கவுன்சிலிங்கிற்கு எப்படி பதிவு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் (MBBS / BDS) பட்டப் படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைன் முறையில் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnmedicalselection.net/ மூலம் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படியுங்கள்: நீட் கவுன்சலிங் எப்போது? மாநிலங்களுக்கு மருத்துவ கவுன்சில் அனுப்பிய அவசர கடிதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங் பதிவு படிவத்தை ஜூலை 10, 2023 அன்று மாலை 5 மணி வரை நிரப்பலாம். நீட் கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்ய, விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு நீட் கவுன்சிலிங் 2023க்கு ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
2023 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்ய, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.
படி 1: தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்கிற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.- https://tnmedicalselection.net/
படி 2: முகப்புப்பக்கத்தில் MBBS மற்றும் BDS பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: முதலில் தகவல் குறிப்பேட்டைப் படித்துவிட்டு விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 4: இதற்குப் பிறகு, அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின்படி விண்ணப்பப் படிவத்தைக் கிளிக் செய்யவும்.
படி 5: பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பல போன்ற உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.
படி 6: பதிவு செய்தவுடன், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்
படி 7: கவுன்சிலிங் விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
படி 8: கேட்கப்பட்ட அனைத்து கட்டாய ஆவணங்களையும் பதிவேற்றவும்
படி 9: நீட் கவுன்சிலிங் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும்
படி 10: எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப்பதிவு படிவத்தின் கடின நகலை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.