பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1. 43 லட்சம் பேர் பதிவு; செப்.7 முதல் கலந்தாய்வு

Tamil Nadu Engineering Admissions counselling latest Tamil News: பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 1,43,774 பேர் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர்.

 Tamil Nadu news in tamil: 1,43,774 candidates registered for Engineering says TNEA

Tamil Nadu news in tamil: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலையால் தமிழத்தில் கடந்த மே மாதம் நடக்க இருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்த்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 2021-22ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் (பி.இ., பி.டெக்.) சேருவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பதிவை மேற்கொள்ளலாம் எனவும், விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் (ஆகஸ்ட் 24) எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்திருந்தது. இதன்படி, பொறியியல் படிப்புகளில் விரும்பிய மாணவர்கள் உற்சாகமாக தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றினர்.

பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர கடந்த ஆண்டு, 1.27 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 1,14, 206 பேர் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இது 2019-20ம் ஆண்டை விட குறைவு ஆகும். எனினும், நேற்று (ஆக.24) மாலை நிலவரப்படி, இதுவரை 1,38,533 விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும் 1,43,774 பேர் பொறியியல் படிப்புகளில் சேர பதிவு செய்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், நேற்று நள்ளிரவு வரை பதிவு செய்ய நேரம் வழங்கப்பட்ட நிலையில் அதுவரை பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 27 வரை அவகாசம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பம் பதிவு செய்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று (ஆக.25-ம் தேதி) வெளியாக உள்ளது எனவும். செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்.20-ம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 பொறியியல் சேர்க்கை மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியுள்ளது. எங்கள் குழு பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தரவுகளைச் சேகரித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ -யின் தரவுகளுக்காக குழு காத்திருக்கிறது. அவற்றை நாங்கள் ஓரிரு நாட்களில் பெறுவோம். கடந்த ஆண்டும், டெல்லியில் இருந்து தான் எங்களுக்கு தரவு கிடைத்தது, ”என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

“விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் 500 இடங்களுக்கு 2,350 வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான உடல் சரிபார்ப்பு தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில் கடந்த திங்களன்று தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து வருகின்றனர். நாங்கள் தினமும் 50 மாணவர்களை அழைத்துள்ளோம், மேலும் கொரோனா நெறிமுறை முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 28 வரை விளையாட்டு வீரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, செப்டம்பர் 4 ம் தேதி தகுதி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news in tamil 143774 candidates registered for engineering says tnea

Next Story
இனி ரேண்டம் எண் இல்லை; பொறியியல் சேர்க்கையில் முக்கியத்துவம் பெறும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள்tamil nadu govt arts and science college admission online application starts from july 26th, tn govt arts and science college online application opens, arts and science college online application starts from july 26 to august 10, தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 26ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பm, கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு, collegiate directorate, tamil nadu, arts and scinece college application
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express