Tamil Nadu 11th Results: பதினோராம் வகுப்பு தேர்வெழுதிய 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்( ஜூலை 31 வெள்ளிக்கிழமை) இன்று முடிவுகளைப் பெறுவார்கள். 11-ஆம் வகுப்பு முடிவுகளைத் தவிர, 12 ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.
மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் #11Results pic.twitter.com/QbsBnJ3JOD
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 31, 2020
முன்னதாக, தனது ட்வீட்டில், தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று காலை 9:30 மணிக்கு 11-ம் வகுப்பிற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார். இதனை dge.tn.gov.in, tnresults.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாக பெறுவார்கள்.
COVID-19 தொற்றுநோய் காரணமாக மார்ச் மாதத்தில் நடைபெற்று வந்த பிளஸ் ஒன் தேர்வுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் அவை SSLC தேர்வோடு சேர்த்து ரத்து செய்யப்பட்டன. தேர்வில் தேர்ச்சி பெற, தலா 100-க்கு ஆறு பாடங்களில் தலா 35 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
COVID-19 தொற்றுநோய் காரணமாக எழுத முடியாத 11-ஆம் வகுப்பு தேர்வுகளில், மாணவர்களை மதிப்பீடு செய்ய அரசு சிறப்பு சூத்திரங்களை வகுத்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறனுக்கான 80 சதவீத மதிப்பெண்களும்,வருகையின் அடிப்படையில் 20 சதவீதமும் கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்தம் 2,716 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 96.04 சதவீதத்தைத் தொட்டு, கடந்த ஆண்டை விட மேம்பட்டுள்ளது.
மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக தேர்ச்சியடைந்துள்ளனர், தங்களின் தேர்ச்சி விகிதத்தை 97.49 சதவீதமாக பதிவு செய்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.38%
அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.10 % தேர்ச்சியுடன் கோவை முதலிடம் பெற்றுள்ளது.
அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 92.71 %
அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 96.95 %
மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 99.51 %
பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 97.56 %
ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 91.77 %
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலை பள்ளிகள் -2,716
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 96.04% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவர்கள் dge.tn.gov.in, tnresults.nic.in என்ற வலைத்தளங்கள் மூலம் முடிவுகளை சரிபார்க்கலாம். மாணவர்கள் வலைத்தளங்களை லாக் இன் செய்ய வேண்டும். ’டவுன்லோடு’ பட்டனை கிளிக் செய்க. பதிவு எண் / ரோல் எண்ணை உள்ளிடவும். உங்கள் முடிவுகள் திரையில் தோன்றும். அதை டவுன்லோடு செய்து மதிப்பெண்களை குறித்துக் கொள்ளவும்.
வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மொத்தம் 92.3 சதவீத மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றனர். பெண்கள் ஆண்களை விட 5.39 சதவீதம் அதிக மதிப்பெண்களை பெற்றனர். மொத்தம் 94.8 சதவீத பெண்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர், ஆண்களின் தேர்ச்சி சதவீதம் 89.41 சதவீதமாக உள்ளது.
2018 முதல், தமிழக வாரியம் முதலிடம் பெறும் மாணவர்களின் பெயர்களை விளம்பரம் செய்வதை நிறுத்தியது. அதற்கு பதிலாக, அதிக தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்யும் நகரம் அல்லது மாவட்டத்தை அறிவித்து வருகிறது. தமிழக கல்வித்துறையின் படி, இந்த நடவடிக்கை ‘ஆரோக்கியமற்ற’ போட்டியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இணையதளத்தில் உங்கள் மதிப்பெண்ணைச் சரிபார்க்க,மானவரின் ரோல் எண் மற்றும் பிறந்த தேதி தேவை. உள்நுழைய இவை உதவும். 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் முடிவுகளை சரிபார்த்துக் கொண்டிருப்பதால், ஆவணங்களை முன் கூட்டியே தயார் செய்துக் கொள்ளவும்.
தமிழக அரசு 2018-ஆம் ஆண்டில் 11 ஆம் வகுப்புக்கு தடுப்புக்காவல் கொள்கையை ஏற்றுக்கொண்டது. இதனால் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாத மாணவர், 12 ஆம் வகுப்பில் பின்னர் அதை எழுதி, தேர்ச்சி பெற முடியும்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை விசிட் செய்யவும்
ஸ்டெப் 2: முகப்புப் பக்கத்தில் இருக்கும் இடைநிலை தேர்வு முடிவைக் கிளிக் செய்க
ஸ்டெப் 3: உங்கள் ரோல் எண்ணை உள்ளிட்டு ’செக்’ பட்டனை கிளிக் செய்க
ஸ்டெப் 4: உங்கள் மதிப்பெண்கள் திரையில் தோன்றும்