தமிழக காவல்துறையின் சுருக்கெழுத்து பணியகத்தில் இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Reporter
காலியிடங்களின் எண்ணிக்கை : 54
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 36,200 - 1,14,800
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0 என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“