காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கடசி நாள் 13.10.2018.

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டா் (கைரேகை) பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான தேர்வு முறை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவு மற்றும் லட்சியமாக இருந்து வருகிறது. காவல் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி தகுதி அடிப்படையில் அதற்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு காவல் துறையில் 202 சப்-இன்ஸ்பெக்டா் (கைரேகை) பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து இந்த தேர்வுக்கு தயார் ஆவது குறித்த விளக்கம் இங்கே பகிரப்பட்டுள்ளது.

Tamil Nadu Police Recruitment 2018 : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள்:

1. 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
2. தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்.
3. எந்த பிரிவிலும் பட்டப்படிப்பை முடித்திருக்கலாம்.
4. சம்பளம் – 36900 – 116600 வரை வழங்கப்படும்.
5. இந்த அறிவிப்பு வெளியான 29.08.2018 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கடசி நாள் 13.10.2018.
6. தேர்வு நடைபெறுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு //www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close