scorecardresearch

போஸ்ட் ஆபிஸில் வேலை.. 10ஆம் வகுப்பு தகுதி.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்தப் போஸ்ட் ஆபிஸ் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 -27-க்குள் இருக்க வேண்டும்.

post office jobs
தபால் அலுவலக வேலைவாய்ப்பு

தமிழக போஸ்ட் ஆபிஸில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பபங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்த பணியிடங்கள் 58 என அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரங்களை போஸ்ட் ஆபிஸ் இணையத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

கல்வித் தகுதி
இந்தப் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மோட்டர் குறித்து அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.63 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

தேர்ச்சி முறை
தேர்வர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.
வயது வரம்பில் பழங்கடி, பட்டியலின சமூகத்தினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu post office invites applications for the post of driver