தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெற உள்ள நிலையில், கடைசி நேரத்தில் எப்படி தயாராக வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெறும் தேர்வுகளில், மார்ச் 5 ஆம் தேதி ஆங்கில தாள் நடைபெறுகிறது. எனவே ஆங்கில தாளுக்கு கடைசி நேரத்தில் எப்படி தயாராவது என்பதை தெரிந்துக் கொள்வோம்.
இதுவரை படித்தவற்றை திருப்பி படியுங்கள். பாடங்களுக்கு பின்னால் உள்ள பயிற்சி வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அவற்றிலிருந்து அதிக அளவில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. செய்யுள் (Poem) பகுதியில், செய்யுள் பெயர் மற்றும் ஆசிரியர் பெயரை நன்றாக படித்துக் கொள்ளுங்கள். செய்யுள் மற்றும் உரைநடை பகுதி வினாக்களுக்கு எப்படி விடையளிக்க வேண்டும், சுருக்கமாகவும், சரியான முழுமையானதாகவும் எப்படி விடையளிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேர்வில் விடையளிக்கும்போது சரியான வினா எண்ணை குறிப்பிடுங்கள். எழுத்து பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள். இலக்கணப் பிழையை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இலக்கண வினாக்களுக்கு கேள்வியை ஒருமுறைக்கு இரண்டு முறை நன்றாக படித்து உள்வாங்கிக் கொண்டு பின்பு விடையளியுங்கள்.
தேர்வுக்கூடத்திற்கு மறக்காமல் ஹால்டிக்கெட், பேனா மற்றும் தேவையான பொருட்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். தேர்வுக் கூடத்தில் மனதை ஒருமுகப்படுத்தி வினாத்தாளை நன்றாக படித்து, நிதானமாக விடையளியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“