தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 19) நடைபெற்ற கணிதத் தாள் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெறுகின்றன. இந்தநிலையில், இன்று கணிதத் தாள் நடைபெற்றது.
12 ஆம் வகுப்பு கணிதத் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. பெரும்பாலும் பாடங்களுக்கு பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களில் அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பாடங்களுக்கு உள்ளிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும், அவையும் எளிதாகவே இருந்தன. இதனால் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு மாணவர்கள் சுலபமாகவே பதில் அளித்துள்ளனர்.
3 மதிப்பெண் வினாக்களும் எளிதாகவே இருந்தன. பெரும்பாலும் பாடங்களில் இருக்கும் எடுத்துக்காட்டு வினாக்கள் அல்லது பாடத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களே கேட்கப்பட்டிருந்தன.
5 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை சில கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. அதாவது விடையளிக்க அதிக நேரம் தேவைப்படுபவையாகவும், அதிக கணக்கீடுகள் செய்ய வேண்டியவையாகவும் சில வினாக்கள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் பெரும்பாலான வினாக்கள் விடையளிக்க ஈஸியாகவே இருந்தன. மாணவர்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் வினாத்தாள் இருந்தது. இதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இந்தநிலையில், இந்த ஆண்டு கணித பாடத்தில் அதிக மாணவர்கள் சென்டம் எடுக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வினாத்தாள் எளிதாக இருந்ததால், கணிதப் பாடத்தில் பெயில் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“