தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு கணித் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இதனால் பொறியியல் சேர்க்கைக்கான கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெறுகின்றன. இந்தநிலையில், இன்று கணிதத் தாள் நடைபெற்றது.
12 ஆம் வகுப்பு கணிதத் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. பெரும்பாலும் பாடங்களுக்கு பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களில் அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. சின்ன ட்விஸ்ட் ஆக பாடங்களுக்கு உள்ளிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும், அவையும் எளிதாகவே இருந்தன.
3 மதிப்பெண் வினாக்களும் எளிதாகவே இருந்தன. பெரும்பாலும் பாடங்களில் இருக்கும் எடுத்துக்காட்டு வினாக்கள் அல்லது பாடத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களே கேட்கப்பட்டிருந்தன. 5 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை சில கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. இருப்பினும் பெரும்பாலான வினாக்கள் விடையளிக்க ஈஸியாகவே இருந்தன. இதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இந்தநிலையில், இந்த ஆண்டு கணித பாடத்தில் அதிக மாணவர்கள் சென்டம் எடுக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பொறியியல் கட் ஆஃப் சற்று அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் சி.பி.எஸ்.இ மாணவர்களை விட மாநில பாடத்தில் படித்த மாணவர்கள் இன்ஜினியரிங் கவுன்சலிங்கிற்கான கட் ஆஃப்பில் ஆதிக்கம் செலுத்தலாம் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“