12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பிட்; இன்ஸ்டா ஸ்டோரி போட்ட அரசுப் பள்ளி மாணவர்; வேலூரில் அதிர்ச்சி

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பிட் அடித்ததாக, பிட் பேப்பர்களுடன் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்ட அரசுப் பள்ளி மாணவர்; வேலூரில் அதிர்ச்சி

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பிட் அடித்ததாக, பிட் பேப்பர்களுடன் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்ட அரசுப் பள்ளி மாணவர்; வேலூரில் அதிர்ச்சி

author-image
WebDesk
New Update
vellore

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பிட் அடித்ததாக, பிட் பேப்பர்களுடன் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்ட அரசுப் பள்ளி மாணவர்; வேலூரில் அதிர்ச்சி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், பிட் எடுத்துச் சென்று தேர்வு எழுதியதாக, பிட் பேப்பர்களுடன் மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெற்றன. இதில் கடந்த மார்ச் 11 முதல் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது.

இந்தநிலையில், வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், கணக்குப் பதிவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு ‘பிட்’ எடுத்துச் சென்றதாக கூறி, அதனை பள்ளி வளாகத்தில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிகளாக பதிவிட்டுள்ளார்.

மேலும், தனுஷ் நடித்த வி.ஐ.பி படத்தின் ‘வாட் எ கருவாடு’ பாடல், பொல்லாதவன் படத்தில் இடம்பெற்ற ‘படிச்சு பார்த்தேன் ஏறவில்லை’ போன்ற பாடல்களை ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் பின்னணியாக வைத்துள்ளார். கூடவே நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள் பலவற்றையும் அந்த மாணவர் பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

இந்த இன்ஸ்டா ஸ்டோரிகள், தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தேர்வுக்கு மாணவர்கள் பிட் எடுத்து செல்லும் இந்த போக்கு, மாணவர்களின் கல்வித் தரத்தையும், ஒழுக்கத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: