தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழ் தாள் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 11 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் இன்று தமிழ் தாளுடன் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தமிழ் தாள் எப்படி இருந்தது என்பதை தெரிந்துக் கொள்வோம்.
தமிழ் தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 2 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. ஆனால் ஒரு மதிப்பெண் மற்றும் நெடு வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. அதாவது 4 மதிப்பெண், 6 மதிப்பெண் மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன.
பாடத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களைத் தாண்டி சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அவை ஒரு மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்டு இருந்தன. எனவே 100க்கு 100 மதிப்பெண்கள் எடுப்பது கடினம். இவ்வாறு மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபுணர்களும் மாணவர்கள் கருத்தையே வலியுறுத்துகின்றனர். 12 ஆம் வகுப்பை விட 11 ஆம் வகுப்பு தமிழ் தாள் சற்று கடினமாக இருந்தது. மாணவர்கள் 100க்கு 100 எடுப்பது சிரமம். பாடத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களைத் தாண்டி சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன என்று நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“