Tamil Nadu Public Service Commission tnpsc group 4 jobs: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான பதவிகள், முக்கிய தேதிகள் விவரம் இங்கு தரப்படுகிறது.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வாசகர்கள் பயன்பெறும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறது.
TNPSC Group 4 notification 2019 in tnpsc.gov.in: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு
குறைந்த கல்வித் தகுதியில் அரசு வேலை பெறுவதற்கான அரிய வாய்ப்பு இது. எனவே 10-ம் வகுப்பு கல்வித் தகுதி முதல் உயர் கல்வி பெற்றவர்கள் வரை இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள், சிலபஸ் உள்ளிட்ட முழுத் தகவல்கள் அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான tnpsc.gov.in/ -ல் உள்ளது. ஒவ்வொரு பதவியிலும் எத்தனை பணியிடங்கள் உள்ளன? குரூப் 4 தேர்வு தொடர்பான முக்கியமான தேதிகள் இங்கு பட்டியலாக தரப்படுகிறது.
எழுத்துத் தேர்வைப் பொறுத்தவரை 10-ம் வகுப்பு பாடத்தரத்தில் இருந்து 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 200 வினாக்கள், அதிகபட்ச மதிப்பெண்கள் 300 ஆகும். ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14.
தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.