கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு/ ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல்களின்படியும், தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்க கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை
1-3 வகுப்புகள் வரை – தேர்வு நேரம் காலை 10.00 – 12.00 மணி
07.04.2025 திங்கட்கிழமை – தமிழ் மொழித் தேர்வு
08.04.2025 செவ்வாய்கிழமை – விருப்ப மொழித் தேர்வு
09.04.2025 புதன்கிழமை - ஆங்கில மொழித் தேர்வு
11.04.2025 வெள்ளிக்கிழமை – கணக்கு தேர்வு
4, 5 வகுப்புகள் தேர்வு நேரம் 2.00 – 4.00 மணி
07.04.2025 திங்கட்கிழமை – தமிழ் மொழித் தேர்வு
08.04.2025 செவ்வாய்கிழமை – விருப்ப மொழித் தேர்வு
09.04.2025 புதன்கிழமை - ஆங்கில மொழித் தேர்வு
11.04.2025 வெள்ளிக்கிழமை – கணக்கு தேர்வு
15.04.2025 செவ்வாய்க்கிழமை – அறிவியல் தேர்வு
17.04.2025 வியாழக்கிழமை – சமூக அறிவியல் தேர்வு
ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/3888ddf6-467.png)