Advertisment

அரையாண்டு தேர்வுத் தேதிகள் அறிவிப்பு; முழு அட்டவணை இங்கே

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு; ஒவ்வொரு தேர்வின் தேதி விவரம் இங்கே

author-image
WebDesk
New Update
இன்று முதல் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்: மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் நேரில் வாழ்த்து!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி 11, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

11-ம் வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரை, 12-ம் வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரை, 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.

6-10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 11 - மொழிப்பாடம் (தமிழ்)

டிசம்பர் 12 - விருப்ப மொழி

டிசம்பர் 13 - ஆங்கிலம்

டிசம்பர் 15 – அறிவியல்

டிசம்பர் 18 – கணிதம்

டிசம்பர் 20 - சமூக அறிவியல்

டிசம்பர் 21 - உடற்கல்வி தேர்வுகள்

11, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 7 – மொழிப்பாடம் (தமிழ்)

டிசம்பர் 08 – ஆங்கிலம்

டிசம்பர் 11 - கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது)

டிசம்பர் 13 - தகவல் தொடர்பு ஆங்கிலம், அறவியல் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல்

டிசம்பர் 16 - இயற்பியல், பொருளியல்

டிசம்பர் 19 - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்

டிசம்பர் 22 - உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸினஸ் கணிதம் மற்றும் புள்ளியியல்

தேர்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் எமிஸ்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை இருந்தால், 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அதைப் பதிவு செய்ய வேண்டும்.

இதனிடையே 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடங்கள் முழுவதையும் டிசம்பர் முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ​​அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு, டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பத்து நாட்களும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களும் அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

School Education Department exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment