Advertisment

அரசு பள்ளிகளில் 2236 உபரி ஆசிரியர்கள்; பணி நிரவல் செய்ய கல்வித்துறை முடிவு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரியாக 2,236 இடைநிலை ஆசிரியர்கள்; பணி நிரவல் செய்ய தொடக்கக் கல்வித் துறை முடிவு

author-image
WebDesk
New Update
school students

2,236 இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய தொடக்கக் கல்வித் துறை முடிவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரியாக உள்ள 2,236 இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதில் உள்ள உபரி பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்படும். அதன்படி வரும் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே 2023 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இந்நிலையில் பணி நிரவல் கலந்தாய்வானது தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையையும் கருத்தில் கொண்டு நடத்தப்பட உள்ளது. எனவே, குறைந்த மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வியூகங்கள் அமைத்து சேர்க்கையை அதிகரிப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

கூடுதல் மாணவர்களை பள்ளிகளில் சேர்த்து உபரி பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், உபரியாக உள்ளவர்களின் விவரங்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Teacher
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment