தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இதையும் படியுங்கள்: சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப் படுவதை உறுதி செய்துள்ளோம்; கோவையில் அன்பில் மகேஷ் பேட்டி
அந்த உத்தரவின் படி 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த வகுப்புகளில் மாணவர்களின் பாட சம்மந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் கட்டாயம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், "மாலை நேர வகுப்புகள் கட்டாயம் இல்லை. தேவைப்படும் பள்ளிகள் வைத்து கொள்ளலாம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, மாலை நேர வகுப்புகளை வைத்து கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil