Advertisment

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வு கட்டாயம்; பள்ளி கல்வித்துறை தகவல்

2024-25 ஆம் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வு கட்டாயம்; பள்ளிக் கல்வித்துறை தகவல்

author-image
WebDesk
New Update
CBSE 2024 Result Class 12th exam over when is result date

2024-25 ஆம் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வு கட்டாயம்; பள்ளிக் கல்வித்துறை தகவல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ உட்பட அனைத்துவித பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் கட்டாயம் தமிழ் பாடத்தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2015–16 ஆம் ஆண்டு கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயப் பாடமானது. தொடர்ந்து 2016–17 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 2 ஆம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் பாடம் கட்டாயம் என்ற நடைமுறை அமலானது. அதன்படி 2023–24 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக நடைமுறைக்கு வந்தது.

இந்தநிலையில், வரும் 2024–25 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இது மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உட்பட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி சி.பி.எஸ்.ஐ பள்ளிகளில் சுமார் 6 ஆயிரம் பேர் வரை தாய் மொழி தமிழ் அல்லாத மாணவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

10 ஆம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயம் என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. மேலும், இதர கல்வி வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்வதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Cbse Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment