Advertisment

ஆசிரியராக விருப்பமா? டி.டெட் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி

டி.டெட் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி; பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு; மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
TN Govt announce RS 2500 Hikes Salary For Part Time Teachers Tamil News

டி.டெட் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி; பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு; மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பள்ளிகளில் பணிபுரிய உதவும் டி.டெட் எனப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (D.Ted) மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள தமிழக பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 

Advertisment

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் பட்டயப் படிப்பு எனப்படும் டி.டெட் படிப்பை படித்திருக்க வேண்டும். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான டி.டெட் படிப்புக்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்த டி.டெட் படிப்பை படிக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி படிப்பில் சேர முடியும்.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், தொடக்கக் கல்வி பட்டய படிப்புக்கு, 1,740 இடங்கள் உள்ளன. இதேபோல், 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 24 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,450 இடங்கள் உள்ளன. இவற்றில் 2024-25 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி அரசுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் கருத்துருவை அனுப்பியிருந்தார். 

அதையேற்று, உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தொடக்க கல்வி பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள தமிழக அரசின் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, டி.டெட் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே 30 ஆம் தேதிக்குள் பெற்று, அதன் மீதான பரிசீலனையை ஜூன் 3 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மேலும், மதிப்பெண், சாதிவாரியாக மாணவர்கள் ஜூன் 7 ஆம் தேதி தேர்வு செய்யப்படுவர். அதன்பின் வகுப்புகள் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெறும். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கற்பித்தல் பயிற்சிகள் ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் நடத்தப்படும். மேலும், பொதுத் தேர்வு ஜூன், மே மாதங்களில் நடைபெறும்.

இதுதவிர அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பூர்த்தியாகாமல் இருந்தால் அதை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களே உடனடி சேர்க்கை மூலம் நேரடியாக நிரப்பிக் கொள்ளலாம். அதேபோல், நடப்பாண்டு டி.டெட் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையானது ஒரு மாதம் முன்னதாக ஜூனிலேயே நடத்தப்படும். அதற்கேற்ப இந்தப் படிப்புக்கான கல்வியாண்டு ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே வரை மேற்கொள்ளப்படும். எனினும், வழக்கம்போல் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை முதல் ஜூன் வரை கல்வியாண்டு அமையும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Teacher
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment