Advertisment

பிளஸ் 1 பொதுத் தேர்வு; மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் வேண்டுமா? மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Tn sslc exam

பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் வேண்டுமா? மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

11 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது..  

Advertisment

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அந்தவகையில், 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 14 ஆம் தேதி வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை நாளை பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பில் உள்ளதாவது: மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு வரும் 31 ஆம் தேதி மறுகூட்டல்-II/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பம் என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்களை எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மே 31 (வெள்ளிகிழமை) காலை 11 மணி முதல் ஜூன் 4 (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505 

மறுகூட்டல்-II: உயிரியல்-ரூ.305 மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205. 

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

School Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment