Advertisment

பிளஸ் 2 பொதுத்தேர்வு; பிப்ரவரி 20-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியீடு

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
New Update
plus 2 exam

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை வரும் 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 1 ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வுடன் தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 22 ஆம் தேதி வேதியியல் பாடத் தேர்வுடன் நிறைவடையும். இடைப்பட்ட நாட்களில் கணிதம், கணினியியல், வணிகவியல், உயிரியியல், இயற்பியல், பொருளியல், வேளாண்மை, வீட்டு அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment