தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், சட்டபேரவைத் தேர்தல் நெருங்கி வருவதாலும் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையளிக்க பள்ளிக்கல்வி துறை யோசனை செய்து வருகிறது
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தாக்கல் அடுத்தமாதம் 12 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் 88 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது .
வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் காரணமாக, ஆசிரியர்கள் வரும் நாட்களில் தேர்தல்பணிகளில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து பள்ளிக்கல்விதுதுறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கையில், " கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடைபயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு அறிவிப்பு வந்தால் எப்படி எதிர்நோக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும்குழப்பத்தில் இருந்தார்கள்.
மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு உடலும் உள்ளத்தினையும் ஒருசேர ஆய்வுசெய்து பாதுகாப்பினை உறுதிசெய்து 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பினை தமிழகஅரசு அறிவித்ததை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இருப்பினும் மாணவர்களின் கற்றல் தடையில்லாமல் நடைபெறும்வகையில் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் பள்ளிகளில் ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப் பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் தமிழக சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆசிரியர்கள் வரும்வாரத்திலிருந்து தேர்தல்பணி பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவுள்ளக் காரணத்தினாலும் கொரோனா பரவலிருந்து மாணவர்களை முழுமையாக பரிசோதித்து பாதுகாக்க ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வாய்ப்பில்லாதக் காரணத்தினால் பொதுத்தேர்வை எழுதவுள்ள 12 ஆம் வகுப்பைத் தவிர்த்து ஏற்னவே தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவல் தடுக்க பாதுகாப்புக்கருதி விடுமுறையளிக்க ஆவனசெய்யும்படி பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்" என்று தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடைபயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு அறிவிப்பு வந்தால் எப்படி எதிர்நோக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும்குழப்பத்தில் இருந்தார்கள்.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 17,921 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 83.76 சதவீதம் மேற்கண்ட ஆறு மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 9,927 பாதிப்புகளும், கேரளாவில் 2,316 தொற்றுகளும், பஞ்சாபில் 1,027 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.