/tamil-ie/media/media_files/uploads/2023/07/DPI.jpg)
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் , ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்ககங்கள், பள்ளிகள் 30.06.2024 அன்றைய நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர் , கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-1.2.3 விவரங்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பணியிட வாரியாக ( Category wise ) தனித்தனியாக a3sec.tndse @ gmail.com / cosea4sec @ gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ( 05.07.2024 ) அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.