New Update
00:00
/ 00:00
பெரிய அளவில் தகவல் பரவலை உறுதி செய்யும் வகையில், மாநில பள்ளிக் கல்வித் துறையானது, பல்வேறு பங்குதாரர்களுக்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையே செய்திகளை அனுப்ப, வாட்ஸ்அப்புடன் இணைந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும் என்றும், மாநிலத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பிறகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த டை-அப்பைத் தொடங்குவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலத்தில் உள்ள அரசு, உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் 1.16 கோடி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு அரசு உத்தரவுகள், தரவு பகுப்பாய்வு, தேர்வு முடிவுகள் போன்ற மொத்த செய்திகளை உடனடியாக அனுப்ப இந்த மெசெஜிங் சிஸ்டம் உதவும்.
இந்த வசதியை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, பங்குதாரர்களின் தொடர்பு எண்களை மே 25க்கு முன் அங்கீகரிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
"தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி (TNeGA) மூலம் பள்ளிக் கல்வித் துறையின் வாட்ஸ்அப் சேனல் ஏற்கனவே எங்களிடம் உள்ளது. இதன் சோதனை சமீபத்தில் முடிந்தது," என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"மொத்த செய்திகளை இந்த சேனல் மூலம் பகிரலாம். உதாரணமாக, 10 வினாடிகளில், சுமார் இரண்டு லட்சம் ஆசிரியர்களுடன் தகவலைப் பகிர்ந்து கொள்ளலாம். சோதனை நிலையில், தினசரி 10,000 செய்திகள் வரை தொடர்புகளுக்கு அனுப்ப முடியும் என்பதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அடுத்த ஒரு வாரத்தில், ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு கோடி எண்களுக்கு செய்திகளை அனுப்பும் நிலையை எட்டுவோம்.
பெற்றோரின் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிடுவதன் மூலம் தொடர்பு எண்கள் அங்கீகரிக்கப்படும். கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (EMIS) உள்ளிடுவதற்கு முன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு சரிபார்ப்போம்," என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
தற்போது, லாக்-இன்ஸ் மாநில அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. விரைவில், துறை இயக்குனர்கள், அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.