Advertisment

பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்; பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
TN Govt announce RS 2500 Hikes Salary For Part Time Teachers Tamil News

பட்டதாரி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அட்டவணையின்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்துக்குள் மாறுவதற்கான கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதி நடத்தப்பட வேண்டும். ஆனால், அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதாலும், தேர்தல் பணியை மேற்கொள்ள ஆசிரியர்கள் அங்கு செல்ல இருப்பதாலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்துக்குள் மாறுவதற்கான கலந்தாய்வு விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் ஜூலை 11 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும். இதர மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுபோல் ஜூலை 10 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு ஜூலை 11 ஆம் தேதிக்குப் பதிலாக 12 ஆம் தேதி நடத்தப்படும். இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Teacher School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment