டிஜிட்டல் உலகிற்கு மாறும் பள்ளிக் கல்வி; விர்ச்சுவல் ரியாலிட்டி - ஏ.ஐ ஸ்டூடியோவை திறந்து வைத்த அன்பில் மகேஷ்

கல்வித் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சி; சென்னையில் விர்ச்சுவல் ரியாலிட்டி – ஏ.ஐ ஸ்டூடியோவை திறந்து வைத்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

கல்வித் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சி; சென்னையில் விர்ச்சுவல் ரியாலிட்டி – ஏ.ஐ ஸ்டூடியோவை திறந்து வைத்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

author-image
WebDesk
New Update
anbil digital

சென்னையில் விர்ச்சுவல் ரியாலிட்டி – ஏ.ஐ ஸ்டூடியோவை திறந்து வைத்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (புகைப்படங்கள்: அன்பில் மகேஷ் எக்ஸ் பக்கம்)

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

அறிவியல் சோதனைகள் முதல் கதைகள் வரை, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பு மூலம் கல்வி தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Advertisment

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை சென்னையில், பள்ளி கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து படப்பிடிப்பு ஸ்டுடியோக்களை திறந்து வைத்தார்.படப்பிடிப்பு ஸ்டுடியோக்கள் மட்டுமின்றி, 8 கோடி செலவில் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஸ்டுடியோ, பிரிவியூ தியேட்டர், ஆடியோ ரூம் ஆகியவற்றையும் பள்ளிக் கல்வித்துறை நிறுவியுள்ளது.இந்த வசதிகளை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) நிர்வகிக்கும்.

இதுதொடர்பாக, அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மெய்நிகர் ஒளிப்பதிவுக் கூடம் (Virtual Studio) உள்ளிட்ட 5 தொழில்நுட்பப் படப்பதிவுக் கூடங்களையும், ஒலிப்பதிவுக் கூடத்தையும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் திறந்துவைத்தோம். 1 கோடியே 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், 5 இலட்சத்தி 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் இப்படப்பதிவுக் கூடங்களில் காணொலிகள் உருவாக்கப்படவுள்ளது. தொடர்ந்து பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு வழிகாட்டி ஆலோசனைகள் வழங்கும் “14417” கட்டணமில்லா தொலை பேசியின் விரிவுப்படுத்தப்பட்ட சேவையினையும் தொடங்கி வைத்தோம்,” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

”மாணவர்களும் ஆசிரியர்களும் பாடப்புத்தகக் கதைகளில் மூழ்கி நாடகம் போல் கற்றுக் கொள்ள வி.ஆர்.ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்திலிருந்து ஒரு அத்தியாயத்தை படிப்பதோடு மட்டுமில்லாமல், அவர்களும் அதில் ஒரு பகுதியாக இருக்க முடியும். டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் ஆரம்ப சிக்கல்கள் உள்ளன. முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்க, இதுவரை 15 ஆசிரியர்களைக் கொண்ட குழுவை கல்வித்துறை தேர்வு செய்துள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு ஸ்டுடியோக்களைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைப் படமெடுக்கவும் திருத்தவும் பயிற்சி அளிக்கப்படும். திறன்களை தேர்ச்சி பெற்றவுடன், இந்த 15 ஆசிரியர்கள் ஐந்து லட்சம் ஆசிரியர்களை ஈர்க்கும் தூதுவர்களாக இருப்பார்கள் என நம்புகிறோம்," என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

இந்த நாடகங்களைப் பதிவுசெய்து, அவற்றை VR அனுபவங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், மாணவர்கள் கிட்டத்தட்ட பாட கதைக்குள் நுழைய முடியும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 1.23 கோடி மாணவர்கள் மற்றும் 58,721 பள்ளிகள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களின் அடிப்படையில் அறிவியல் சோதனைகளின் அதிவேக உருவகப்படுத்துதல்களை அணுகலாம்.

VR ஸ்டுடியோ மாணவர்களை உபகரணங்களைக் கையாளவும், எதிர்வினைகளைக் கவனிக்கவும், கற்றல் அனுபவங்களில் ஈடுபடவும் அனுமதிக்கும். கல்வியாளர்கள் இந்த ஸ்டுடியோக்களைப் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு கல்வி உள்ளடக்கத்தை உருவாக்கலாம். இந்த வீடியோக்கள் பள்ளிக் கல்வித்துறையின் யூடியூப் (Youtube) சேனலில் பதிவேற்றப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Anbil Mahesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: