காலாண்டுத் தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகளும் வருவதால் இந்த மாதம், அக்டோபரில் தமிழக பள்ளிகளுக்கு மொத்தம் 17 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதியும், 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதியும் தொடங்கிய காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தது.
செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் முடிவடைந்தது, செப்டம்பர் 28 முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியது. முதலில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் நீட்டிக்கப்பபட்டது. அக்டோபர் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
17 நாட்கள் விடுமுறை பட்டியல்
காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2
பள்ளி மீண்டும் திறப்பு - அக்டோபர் 7
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - அக்டோபர் 11-13
தீபாவளி- அக்டோபர் 31
காலாண்டுத் தேர்வு விடுமுறை, அரசு விடுமுறை என தொடர்ந்து வருவதால் இந்த மாதம் அதிக விடுமுறை நாட்கள் வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“