தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விபரம் பின்வருமாறு- 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.14ம் தேதியும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.18ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளது.
1-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.15ம் தேதி துவங்க உள்ளது. 1-3ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.22-ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்: பாரதிதாசன் பல்கலை.யின் அவலநிலை; படித்தும் பட்டம் பெற முடியாத மாணவர்கள் பட்டம் விட்டு போராட்டம்
செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர்கள் தினமும், 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியும் சனிக்கிழமைகளில் வருகின்றன. இதன் அடிப்படையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 15 நாட்களும், மற்ற மாணவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரையும் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேநேரம், தமிழக அரசு தற்போது, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில் 18ஆம் தேதிக்கு மாற்றம் என அறிவித்துள்ளதால் கூடுதலாக ஒரு நாள் மாணவர்களுக்கு லீவு கிடைக்கின்றதால் பலர் இந்த விடுமுறையினை சுற்றுலா தலங்களுக்கு சென்று கழிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“