/tamil-ie/media/media_files/uploads/2021/01/school-1.jpg)
Tamil News Today
Tamil Nadu Schools Reopening, TN 10th 12th exam date: கொரோனா ( கோவிட் -19) தொற்றுநோய் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டே இருக்கின்றன. மாணவர்கள் பள்ளி சென்று கற்க வாய்ப்பு கிடைக்காமல், இந்த கல்வியாண்டு பாதிக்குமேல் நிறைவடைந்துள்ளது. 10,12 - ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஜனவரியில் இருந்து பகுதி நேர அடிப்படையிலாவது பள்ளிகள் திறக்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்கிறார்கள்.
"ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளால் மாணவர்கள் மிகுந்த சோர்வுடன் இருகின்றார்கள். மாணவர்களுக்கு அதிக அளவில் கவன சிதறல்கள் ஏற்படுகின்றன. கேஜெட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் சில மாணவர்களுக்கு கண் வலி மற்றும் தலைவலி ஏற்படுகின்றது. இதானால் மாணவர்களுக்கும் சமூகத்திற்குமான தொடர்பு குறைந்து கொண்டே வருகின்றது.
மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பிரச்சனைகள் எழுகின்றன. வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்து கற்றுக் கொடுக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். சில மாணவர்கள் பெற்றோர்களுடன் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி வேலைக்கு செல்லும் மாணவர்கள், பள்ளிகள் திறந்த பின் வருவார்களா என்பதில் ஐயம் எழுகின்றது.
மாணவர்கள் வீட்டிலிருந்து எவ்வளவு கற்றுக் கொண்டார்கள் என்பதை மதிப்பிடுட்டு மதிப்பெண்கள் வழங்குவது ஆசிரியர்களுக்கு சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. அரசுத் தேர்வுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளி கல்வித் துறை முறையான அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் உள்ளது. ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் தான், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக 2 - 3 மாதங்கள் கிடைக்கும். பகுதி நேர அடிப்படையிலாவது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறிதான் " என கல்வியாளர்கள் கூறுகின்றனர்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.