Tamil Nadu SSLC Result 2019: தமிழ்நாடு 10-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியானது.
இதில், 95.2 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது. 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் தொடர்பான உடனடித் தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் காணலாம்.
Live Blog
Tamil Nadu SSLC Result 2019 Live: தமிழ்நாடு 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பான உடனடித் தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் காணலாம்.
கிராமப்புற பள்ளிகளுக்கு 100 சதவிகிதம் தேர்ச்சி என்பதே பெரிய இலக்கு. தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 6100.
கணிசமான அரசுப் பள்ளிகளும் 100 சதவிகித தேர்ச்சி பெற்றிருக்கின்றன.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில், மாவட்டம் வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம்
10ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் : மாவட்ட வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம்!https://t.co/5wMBD3FLqB | #10thResults | #DistrictsWisePercentage pic.twitter.com/4AAHAwXBkq
— News7 Tamil (@news7tamil) 29 April 2019
ரிசல்ட் வெளியானவுடன், லட்சகணக்கானோர் இணையத்தில் முடிவுகளை பார்க்க முயன்று கொண்டிருப்பார்கள். இதனால், சர்வர் கடும் பிஸியாக இருக்கும். அப்போது இணையதளம் மெதுவாக செயல்படும் பட்சத்தில், சிறிது நேரம் பொறுமை காத்து முடிவுகளை காணுங்கள்.
பதட்டம் வேண்டாம்!
மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால், மதிப்பெண்ணை மறுகூட்டல்(Revaluation) செய்ய முடியும். இதற்கு, வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி மாலை 5:45 மணி வரை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடங்களுக்கு தலா 305 ரூபாய், விருப்ப மொழி பாடம் மற்றும் முக்கிய பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பம் அளிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, மறுகூட்டல் முடிவை தெரிந்து கொள்ளலாம்.
‘TN SSLC Result' செயலியை எப்படி பயன்படுத்துவது?
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ இந்த செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்
இன்ஸ்டால் செய்யவும்
செயலியைத் திறக்கவும்
ரிசல்ட் இருக்கும் இடத்தை சொடுக்கவும்
பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை எண்டர் செய்யுவும்.
இதையடுத்து வெளியாகும் பக்கத்தில், மாணவரின் ரோல் நம்பர், பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தேர்வு முடிவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.
இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம். ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ - மாணவிகள் இத்தேர்வை எழுதியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights