Tamil Nadu SSLC Result 2019: தமிழ்நாடு 10-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியானது.
இதில், 95.2 சதவீதம் மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது. 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் தொடர்பான உடனடித் தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் காணலாம்.
Live Blog
Tamil Nadu SSLC Result 2019 Live: தமிழ்நாடு 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பான உடனடித் தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் காணலாம்.
Tamil Nadu Class 10th Result 2019 @tnresults.nic.in : 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அரசு பொதுத்தேர்வுகளாக இவை நடத்தப்படுகின்றன. 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டன.
10-ம் வகுப்பு தேர்வில் வேலூர் மாவட்டம் 89.98 சதவீத தேர்ச்சியுடன் பின் தங்கி இறுதி இடத்தில் உள்ளது. கல்வி அதிகாரிகள், தேர்ச்சி சதவிகிதத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
கிராமப்புற பள்ளிகளுக்கு 100 சதவிகிதம் தேர்ச்சி என்பதே பெரிய இலக்கு. தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 6100.
கணிசமான அரசுப் பள்ளிகளும் 100 சதவிகித தேர்ச்சி பெற்றிருக்கின்றன.
சிறைக் கைதிகளும் தேர்வு எழுத அனுமதி உண்டு. தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைக் கைதிகள் 152 பேர் ஆவர். அவர்களில் 110 பேர் தேர்ச்சியடைந்தனர்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்ற கடைசி 5 மாவட்டங்கள்.
கடலூர் – 92.86%
காஞ்சிபுரம் – 92.45%
திண்டுக்கல் – 92.40%
நாகை – 90.41%
வேலூர் – 89.98%
புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை(97.57) விட புதுச்சேரி தேர்ச்சி விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், அரசுப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களில் 92.48% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் – 96.12%
ஆங்கிலம் – 97.35%
கணிதம் – 96.46%
அறிவியல் – 98.56%
சமூக அறிவியல் – 97.07%
10 ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள். முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள் : திருப்பூர், ராமநாதபுரம், நாமக்கல். தேர்ச்சி விகிதம் : திருப்பூர் – 98.53% ராமநாதபுரம், – 98.48% நாமக்கல் – 98.45%
10 ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் இணையத்தில் வெளியாகின. வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் – 97% தேர்ச்சி
மாணவர்கள்: 93.3% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 95.2 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் கிடைத்துள்ளது.
ரிசல்ட் வெளியானவுடன், லட்சகணக்கானோர் இணையத்தில் முடிவுகளை பார்க்க முயன்று கொண்டிருப்பார்கள். இதனால், சர்வர் கடும் பிஸியாக இருக்கும். அப்போது இணையதளம் மெதுவாக செயல்படும் பட்சத்தில், சிறிது நேரம் பொறுமை காத்து முடிவுகளை காணுங்கள்.
பதட்டம் வேண்டாம்!
இன்னும் சிறிது நேரத்தில் தமிழக 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியாவிருக்கிறது. ஏற்கனவே தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
மாணவ – மாணவியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் அறிவது தொடர்பான முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
மாணவ – மாணவியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பித்து தேர்வு எழுதாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 22ம் தேதி வரை சிறப்புத் தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்ப தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.
மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால், மதிப்பெண்ணை மறுகூட்டல்(Revaluation) செய்ய முடியும். இதற்கு, வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி மாலை 5:45 மணி வரை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடங்களுக்கு தலா 305 ரூபாய், விருப்ப மொழி பாடம் மற்றும் முக்கிய பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பம் அளிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, மறுகூட்டல் முடிவை தெரிந்து கொள்ளலாம்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 2ம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தனி தேர்வர்கள், 6ம் தேதி முதல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தேசிய இன்ஃபர்மேடிக்ஸ் மையத்தின் (National Informatics Centre- NIC) செயலியையும் மாணவ – மாணவிகள் பயன்படுத்தலாம்.
‘TN SSLC Result’ செயலியை எப்படி பயன்படுத்துவது?
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ இந்த செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்
இன்ஸ்டால் செய்யவும்
செயலியைத் திறக்கவும்
ரிசல்ட் இருக்கும் இடத்தை சொடுக்கவும்
பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை எண்டர் செய்யுவும்.
இதையடுத்து வெளியாகும் பக்கத்தில், மாணவரின் ரோல் நம்பர், பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தேர்வு முடிவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.
இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம். ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ – மாணவிகள் இத்தேர்வை எழுதியுள்ளனர்.