பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கிரேட் அடிப்படையில் தேர்ச்சி வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னதாக முதல்வர் பழனிசாமியுடன் அவர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
முதல்வர் பழனிசாமி உடனான சந்திப்புக்குப் பிறகு கல்வித்துறை அதிகாரிகளையும் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். . சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துறை அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது
இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, தேர்வு உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், கிரேடு முறையைத் தற்போது அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil