Tamil Nadu Xth Result to be announced at tnresults.nic.in: தமிழகத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 10) காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதன்படி தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள மாணவ, மாணவிகள் ஆவலுடம் காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள், http://tnresults.nic.in/ http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் வழியாக தேர்வு மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவு அனுப்பப்பட இருக்கின்றன.
10 ஆம் வகுப்பு தேர்வுக்கு, 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண் சார்ந்த குறைகள்:
இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக, மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், 17.08.2020 முதல் 25.08.2020 வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணையதளம் (www.dge.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இந்தாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வதாக கடந்த ஜூன் 9 ஆம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீத மதிப்பெண்கள், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil