தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 10 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துக் கொள்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8, 2024 வரை நடத்தப்பட்டது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. எனவே தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துக் கொள்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுத் தேர்வு முடிவுகளின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in ஐப் பார்வையிடவும்.
முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் TN SSLC RESULTS 2024 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
மாணவர்கள் தங்கள் விவரங்களை உள்ளிட வேண்டிய புதிய பக்கம் திறக்கும்.
தேவையான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
இப்போது திரையில் உங்கள் தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும்.
முடிவைச் சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கவும்.
மேலும் எதிர்காலத் தேவைக்கு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மறுபுறம், தேர்வு முடிவுகள் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு நேரடியாக குறுஞ்செய்தி வழியில் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலமும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“