தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 21) நடைபெற்ற வேதியியல் பாடத் தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர்.
இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து மாணவர்களும் நிபுணர்களும் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம்.
வேதியியல் தேர்வு ஒட்டுமொத்தமாக கடினமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தன. பெரும்பாலும் பயிற்சி வினாக்களில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. எதிர்ப்பார்த்ததை விட கடினமாக இருந்தன. இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. கணித தேர்வை விட வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் சில மாணவர்கள் வேதியியல் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக கூறுகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ஓரிரு கேள்விகள் கடினமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக தேர்வு விடையளிக்க கூடியதாக இருந்ததாக கூறுகின்றனர்.
இதேபோல் நிபுணர்களும் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாகவும், மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு 50க்கு மேல் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.