Advertisment

Tamil Nadu teacher recruitment 2019: தமிழக அரசில் ரூ.1,16,600 சம்பளத்தில் ஆசிரியர் பணி!

Tamil Nadu teachers recruitment 2019: தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ. 36,900/– முதல்  1,16,600/- வரை ஊதியம் வழங்கப்படும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu teacher recruitment 2019: தமிழக அரசில் ரூ.1,16,600 சம்பளத்தில் ஆசிரியர் பணி!

TN Live updates - X Language paper teachers opinion

Tamil Nadu teacher recruitment 2019: தமிழக மேல்நிலை கல்வித் துறையில், கணினி பயிற்றுவிப்பாளர் காலியிடங்கள் இருப்பதாக, அதிகாரப்பூர்வ தளமான, trb.tb.nic.in. -ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், மார்ச் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 814  காலியிடங்களைக் கொண்டுள்ள இந்த பணியிடத்துக்கு, ஏப்ரல் 4-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு கணினியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

காலியிட விபரங்கள் 

மொத்தம் 814 காலியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு

ஜூலை 1, 2019-ன் படி விண்ணப்பதாரர்கள் 57 வயதை கடந்திருக்கக் கூடாது.

கல்வித் தகுதி 

முதுகலையில் 50% மதிப்பெண்களுடன் பி.எட், அல்லது முதுகலை படிப்புடன், BA-BEd, Bsc-BEd படிப்பில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். M.Tech அல்லது MCA படிப்புடன் BEd  படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu teacher recruitment 2019:  எப்படி அப்ளை செய்வது? 

அதிகாரப்பூர்வ தளமான trb.tn.nic.in -ஐ விசிட் செய்யவும்.

தனித் தகவலை பதிவு செய்துக் கொள்ளவும்.

பதிவெண்ணை வைத்து லாக் இன் செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்தை பதிவேற்றம் செய்துக் கொள்ளவும்.

கட்டணம் செலுத்தவும்.

விண்ணப்பக் கட்டணம் 

பொதுப்பிரிவினருக்கு ரூ.500, இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு ரூ.250.

ஊதியம் 

தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ. 36,900/– முதல்  1,16,600/- வரை ஊதியம் வழங்கப்படும்.

 

 

Tamil Nadu Jobs Teachers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment