தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது.
முக்கிய நாட்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (ஜூலை 10, 2025) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான வாயிலாக அறிவிக்கை எண். 02 / 2025-ஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில், பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், தேவையான கல்வித் தகுதிகள், வயது வரம்பு மற்றும் விண்ணப்ப செயல்முறை குறித்த அனைத்து தகவல்களும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப காலக்கெடு: ஜூலை 10, 2025 முதல் ஆகஸ்ட் 12, 2025, மாலை 5:00 மணி வரை.
அறிவிக்கை தொடர்பான ஏதேனும் கோரிக்கை மனுக்கள் இருந்தால், அவற்றை trbgrievances@tngov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய விரும்பும் அனைவரும் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள முழு அறிவிக்கையைப் பார்க்கவும்.