Advertisment

பட்டதாரி ஆசிரியர் தேர்வு; 2582 காலியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பட்டதாரி ஆசிரியர் தேர்வு; 2582 காலியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு; இதுவரை 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பம்

author-image
WebDesk
New Update
TN TRB Recruitment 2019, TN TRB Exam Notification 2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பட்டதாரி ஆசிரியர் தேர்வு; 2582 காலியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவிற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பள்ளிகளில் 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30 என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுவரை 28,588 பேர் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கல்வித் தகுதி : பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்,

((i) Graduation and 2-year Diploma in Elementary Education; or

(ii) Graduation with Bachelor in Education (B.Ed.); or

(iii) Graduation with Bachelor in Education (B.Ed.); or

(iv) Higher Secondary with 4-year Bachelor in Elementary Education (B.El.Ed.); or

(v) Higher Secondary with and 4- year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed.; or

(vi) Graduation with B.Ed., (Special Education); a degree or its equivalent with such Subjects or Languages; and Pass in Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – II) படித்திருக்க வேண்டும்.

தமிழ் வழியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது பட்டம் அல்லது முதுகலை பட்டம் வரை எதுவரை தமிழ் வழியில் படித்துள்ளார்களோ அதனை குறிப்பிட்டு சான்றிதழ் பெற வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வயதுத் தகுதி : பொது பிரிவினர் 53 வயது வரை விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு பிரிவினர் 58 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 36,400 – 1,15,700

தேர்வு முறை : இந்தத் தேர்வில் தமிழ் வழித் தகுதித் தேர்வு மற்றும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்து எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணி நியமனம் நடைபெறும்.

தமிழ் வழித் தகுதித் தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு 30 வினாக்கள் கேட்கப்படும். இதில் 20 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயமாகும்.

சம்பந்தப்பட்ட பாடத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 150 வினாக்கள் கேட்கப்படும். இந்தப் போட்டித்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 7-ம் தேதி நடைபெறும்.

பாடத்திட்டம் : இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தைத் தெரிந்துக் கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்: https://www.trb.tn.gov.in/admin/pdf/7332271575Ref.3%20TN%20gazette%20no.122%20syllabus%20for%20sgt%20&%20bt%20asst.pdf

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். https://trb1.ucanapply.com/apply_now என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றையும் உள்ளிட வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.12.2023

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் – 600, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி – 300.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

trb Teacher
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment