தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக நிரப்பப்பட உள்ள நிலையில், பாடத்திட்டம் என்ன? எவ்வாறு டவுன்லோடு செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30 ஆகும்.
காலியிடங்களின் விவரம்
தமிழ் - 394
ஆங்கிலம் - 252
கணிதம் - 233
இயற்பியல் - 293
வேதியியல் – 290
தாவரவியல் – 131
விலங்கியல் - 132
வரலாறு – 391
புவியியல் – 106
துறை வாரியான காலியிடங்கள் விவரம்
பள்ளி கல்வித்துறை - 2171 (பின்னடைவு எஸ்.டி பணியிடங்கள் - 171) பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை – 23 (பின்னடைவு காலியிடங்கள் - 4)
ஆதிதிராவிடர் நலத்துறை – 16
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - 12
கல்வித் தகுதி : பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி இருக்க வேண்டும் ((i) Graduation and 2-year Diploma in Elementary Education; or (ii) Graduation with Bachelor in Education (B.Ed.); or (iii) Graduation with Bachelor in Education (B.Ed.); or (iv) Higher Secondary with 4-year Bachelor in Elementary Education (B.El.Ed.); or (v) Higher Secondary with and 4- year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed.; or (vi) Graduation with B.Ed., (Special Education); a degree or its equivalent with such Subjects or Languages; and Pass in Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – II)
தமிழ் வழியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது பட்டம் அல்லது முதுகலை பட்டம் வரை எதுவரை தமிழ் வழியில் படித்துள்ளார்களோ அதனை குறிப்பிட்டு சான்றிதழ் பெற வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள 2222 இடங்களில் 20 சதவீதம், அதாவது 444 இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வயதுத் தகுதி : பொது பிரிவினர் 53 வயது வரை விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு பிரிவினர் 58 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 36,400 – 1,15,700
தேர்வு முறை : இந்தத் தேர்வில் தமிழ் வழித் தகுதித் தேர்வு மற்றும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்து எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணி நியமனம் நடைபெறும்.
தமிழ் வழித் தகுதித் தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு 30 வினாக்கள் கேட்கப்படும். இதில் 20 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயமாகும்.
சம்பந்தப்பட்ட பாடத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 150 வினாக்கள் கேட்கப்படும். இந்தப் போட்டித்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 7-ம் தேதி நடைபெறும்.
பாடத்திட்டம் : இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தைத் தெரிந்துக் கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்: https://www.trb.tn.gov.in/admin/pdf/7332271575Ref.3%20TN%20gazette%20no.122%20syllabus%20for%20sgt%20&%20bt%20asst.pdf
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். https://trb1.ucanapply.com/apply_now என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2023
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் – 600, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி – 300.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.