கடந்த ஆண்டு, ஏப்ரல்/மே, நவம்பா்/டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட செமஸ்டா் தோ்வு முடிவுகள் அடிப்படையில், கல்லூரிகளின் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்ச்சி விகிதப் பட்டியலில், தன்னாட்சி பெறாத இணைப்புக் கல்லுரிகள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலைக்கழக வளாகங்கள் என தனித்தனியாக பட்டியலிடப்பட்டது.
நவம்பா்/டிசம்பர் தேர்ச்சிப் பட்டியல்:
443 தன்னாட்சி பெறாத இணைப்புக் கல்லுரிகளில் , 2 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகதங்களைப் பெற்றுள்ளன. 11 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெரவில்லை.
தன்னாட்சி கல்வி நிறுவனங்களைப் பொறுத்த வரையில்(மொத்தம் 55 கல்வி நிறுவனங்கள்), இரண்டு கல்வி நிறுவனங்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதங்களைப் பெற்றுள்ளன.
வளாக கல்லூரிகள் 69 முதல் 75 சதவீதம் தோ்ச்சியை பெற்று இருக்கின்றன.
ஏப்ரல்/மே தேர்ச்சிப் பட்டியல்:
480 தன்னாட்சி பெறாத இணைப்புக் கல்லுரிகளில், நாமக்கல் விவேகானந்தா பெண்கள் தொழிநுட்பக் கல்லூரியில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 6 கல்லூரிகள் 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகதங்களைப் பெற்றுள்ளன. 2 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெரவில்லை.
தன்னாட்சி கல்வி நிறுவனங்களைப் பொறுத்த வரையில்(மொத்தம் 55 கல்வி நிறுவனங்கள்), இரண்டு கல்வி நிறுவனங்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதங்களைப் பெற்றுள்ளன.
பல்கலைக்கழக வளாகங்களில், எம்.ஐ.டி கல்வி நிறுவனம் அதிகபட்சமாக 75.85% தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
ACADEMIC PERFORMANCE OF AFFILIATED COLLEGES
தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் ஆகஸ்டு 16 ஆகும். இதுவரை 1,21,008 மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். அதில் 93,383 மாணவர்கள் இணையதள வாயிலாகத் தங்களது பதிவுக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.
பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நேரத்தில், அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கான தேர்ச்சி விகிதப் பட்டியலை வெளியிட்டிருப்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil