/indian-express-tamil/media/media_files/e3ZkpgQeB9XFgkGl7iTN.jpg)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? என்பது இங்கே
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகளில் 1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பிப்ரவரி 2024 இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் தேர்வு ஏப்ரல் 2024 இல் நடைபெறும்.
தகுதிகள்
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் நிலையான கல்வியியல் பயிற்சியில் 2 ஆண்டு பட்டம் அல்லது தொடக்கக் கல்வியில் 4 ஆண்டு இளங்கலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி
குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள், அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகளாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்ப தேதிகள் அறிவிப்பு PDF உடன் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் பிப்ரவரி 2024 இல் தொடங்கும். இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளிவந்த பிறகு விண்ணப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டியவை இங்கே.
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும், https://trb.tn.gov.in/
TN TRB ஆட்சேர்ப்பு விருப்பத்தை பூர்த்தி செய்து அதை கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தை கிளிக் செய்து, பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.
பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல் ஐ.டி போன்ற விவரங்களை நிரப்புவதன் மூலம் பதிவு செய்யவும்.
உங்கள் பதிவு ஐ.டி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்து, கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
தேவையான கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இதை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPI மூலம் செலுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.